இணையவழி நுழைவிசைவு வழங்கும் திட்டத்தை செப்ரெம்பரில் நடைமுறைப்படுத்துகிறது சிறிலங்காஐரோப்பாவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் குளிர்காலம் ஆரம்பிக்க முன்னர், இணையவழி நுழைவிசைவு வழங்கும் முறையை சிறிலங்கா நடைமுறைப்படுத்தவுள்ளது.
இது தொடர்பாக சிறிலங்காவின் குடிவரவு,குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தகவல் வெளியிடுகையில், இணையவழி நுழைவிசைவு வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கான 70 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தொழில்நுட்ப சீராக்கல் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அடுத்தவாரம், சுற்றுலாத்துறை, பயணமுகவர்கள், வர்த்தகத்துறையினர், விடுதித்துறையினர் மற்றும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குள் நுழைவதற்கான நுழைவிசைவுக் கட்டணம் எவ்வளவு என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் கட்டணம் சமமானதாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமான நுழைவிசைவு வழங்கும் நாடுகளின் குடிமக்களுக்கு மட்டுமே இலவசமாக நுழைவிசைவு வழங்கப்படும்.
இணையவழி நுழைவிசைவு வழங்கும் பணியகம் கொழும்பில் 24 மணி நேரமும் செயற்படும்.
இந்தப் பணியகத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் , பாதுகாப்பு அமைச்சு, மற்றும் ஏனைய தொடர்புடைய நிர்வாகக் கட்டமைப்புகளின் அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பணியாற்றுவர் என்றும் சூலானந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் ஆபத்தில் சிறிலங்கா - மங்கள சமரவீர எச்சரிக்கைஅரசாங்கத்தின் செயல் திறனற்ற நடவடிக்கைகளால் அனைத்துலக அரங்கில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறிலங்கா, தனிமைப்படுத்தப்படக் கூடிய ஆபத்துள்ளதாக, ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.
இதன்காரணமாக போருக்குப் பிந்திய நல்லிணக்க மற்றும் மீள்கட்டுமானப் பணிகள் மோசமாக பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படம் சிறிலங்காவின் நன்மதிப்புக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடித்து வரும் தூர நோக்கற்ற கொள்கைகளே இந்த நிலை ஏற்படக் காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சனல்4 ஒளிபரப்பிய ஆவணப்படம் போலியானது, பிரிவினைவாதிகளினால் உருவாக்கப்பட்டது என்றால் அந்தத் தொலைக்காட்சிக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் வழக்குத் தொடர முடியும்.
அது பிரித்தானியா ஊடகம் என்பதால், அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நியாயத்தை நிலைநாட்டக் கூடிய எல்லா வாய்ப்புகளும் சிறிலங்கா அரசுக்கு உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இது போலியானது என்றால் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த படையினருக்கு நினைவிடங்களை அமைப்பதனை விட, படையினருக்கு ஏற்படும் களங்கத்தை நீக்குவதே முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்மாத இறுதியில் 500 முன்னாள் போராளிகள் விடுதலை
சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 500க்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் இம்மாத இறுதியில் விடுவிக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் 30ம் நாள் வவுனியாவில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்படவுள்ள முன்னாள் போராளிகளைத் தெரிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் யோசனையை நிராகரித்தது கூட்டமைப்பு
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும் சிறிலங்கா அரசின் யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால், அதில் தாம் பங்கெடுக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
கடந்த 10ம் நாள் கொழும்பு வந்த இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரிடம் சிறிலங்கா அதிபர், தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கும் திட்டத்தை முன்வைத்திருந்தார்.
சிறிலங்கா அதிபரின் இந்தத் திட்டத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
சந்திரிகா காலத்தில் அமைக்கப்பட்ட மங்கள முனசிங்க குழு, மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அனைத்துக் கட்சிக் குழுவும் என்பன முன்வைத்த தீர்வுத் திட்டங்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
இதுபோன்றே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவும் இருக்கப் போகிறது.
எனவே அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டால் கூட்டமைப்பு அதனை அடியோடு நிராகரிக்கும்.
அனைத்துக் கட்சிக் குழுவில் நாம் எப்படி இறுதிவரை பங்கேற்கவில்லையோ அதுபோலவே இதிலும் பங்கெடுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்துள்ளார்.

| தெரிவு செய்யப்பட்ட தமிழர் தலைமையுடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்பட வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 யூன் 2011, 00:24 GMT ] [ தா.அருணாசலம் ] |
நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் சிறிலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கூறியுள்ளது.அத்துடன் சிறிலங்காவில் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தலைமையுடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்தவாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய உறவுகளுக்கான தூதுக்குழுவே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. ஜீன் லம்பேர்ட் தலைமையிலான இந்தக் குழு யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளுக்கு மேற்கொண்ட கள ஆய்வுப் பயணத்தை அடுத்து இந்த அறிக்கை பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |
20.06.2011
புங்குடுதீவு மகா வித்தியாலயதுக்கான அறக்கட்டளை நிதியம் ஆரம்பம்
-----------------------------------------------------------------------------------------------------
இந்தப் பாடசாலைக்கான அவ்வப்போது தேவைப்படும் பல்வேறு செயல் திட்டங்களுக்கு பயன்படுமாறு நிதி உதவி வழங்குமுகமாக நிரந்தர வங்கி வைப்பு தொகையை முதலிட்டு அதிலிருந்து வருகின்ற வட்டிப்பணத்தை உபயோகிக்க முடிவு செய்யபடுள்ளது.இந்த திட்டத்துக்கென ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டு அதிகாரசபையில் 1 .பாடசாலை அதிபர், 2.பழையமாணவர் சங்க செயலாளர் , 3. முன்னாள் அதிபர் திரு .கந்தையா தர்மகுணசிங்கம்4 . நல்லதம்பி பேரின்பநாதன் (விரிவுரையாளர் -யாழ் பல்கலைக்கழகம் ),5 . கார்த்திகேசு குகபாலன் (விரிவுரையாளர் -யாழ் பல்கலைக் கழகம் ) ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் . தற்போது கனடாவில் வசிக்கும் நல்லையா தர்மபாலன் (முன்னாள் அதிபர் ) அவர்கள் இந்த திட்டத்துக்கான கனடா ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு முதற்கட்டமாக கனடாவில் சேகரிக்கபட்ட நிதியாக ஒன்பது லட்சம் இலங்கை ரூபாக்களை வைப்பிலிட்டுள்ளனர் . இந்த திட்டத்துக்கென மேலதிக நிதி சேகரிப்பில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஊருக்கான அமைப்புக்கள், பழைய மாணவர்கள் ,புங்குடுதீவு மக்கள்,வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இந்த திட்டத்துக்கு மதிப்பளித்து உங்களால் முடிந்த நிதியினை பின்னால் வருகின்ற தொடர்புகளை பயன்படுத்தி வழங்குமாறு கேட்டுகொள்ளுகின்றனர்.நிதி பயன்பாடு,தேவைகள் ,விதிமுறைகள் போன்ற மேலதிக விபரங்கள்,காணொளி காட்சிகள் தற்போது ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர் .இத்தோடு பாடசாலைக்கென இணையதளம் ஒன்றிணையும் ஆரம்பித்துள்ளனர் .
Co-Curricular Trust
Pungudutivu Maha Vidyalayam
National Savings Bank (Jaffna Branch)
Saving Account No: 100 060 442 518
With Love
Nalliah Tharmapalan
(Former principal, Pungudutivu Maha Vidyalayam)
Tel: 416 431 4455
4 மணிக்கு கனிமொழியை சந்திக்கிறார் கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் டெல்லி சென்றுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்துப் பேசுகிறார்.
திமுக தலைவர் கலைஞர் இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். கலைஞருடன் திமுக மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
டெல்லி சென்ற கலைஞரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், பழனிமாணிக்கம், ஜெகத் ரட்சகன், காந்தி செல்வன், ஆதிசங்கர், டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இன்று மாலை 4 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை, கலைஞர் சந்தித்துப் பேசுகிறார். ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.
பிரான்சில் தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்கள்! 21st June, 2011

பிரான்சில் அகதி தஞ்சம்கோரும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவாகார அமைச்சகம், இந்த கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பிரபல வழங்கறிஞர்களான Marc Lecacheux - Sandrine Dupuy இருவரும் பங்கெடுத்து கருத்துரைகளையும் - ஆலோசனைகளையும் வழங்கினர்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அகதிகள் விவாகாரம் தொடர்பிலான கருத்துரைகள் முன்வைக்கப்பட்டன. 2009 மே மாதத்துக்கு பின்னர், இலங்கையில் யுத்தம் ஒய்ந்துவிட்டது என்ற விடயம், அரசியல் அரங்குகளில் மட்டுமல்ல அகதிகள் விவகாரத்திலும் பேசப்பட்டும், கருதப்பட்டும் வருகின்றதென கருத்துரைத்த வழக்கறிஞர் Marc Lecacheux அவர்கள், இலங்கைத் தமிழர்கள் அகதி விண்ணப்பம் கோரலாம் என்ற விடயம் இன்னமும் பிரான்சில் நடைமுறையில் உள்ள நிலையில் சாதகமான வாய்ப்புகள் நிறையவே உள்ளதென நம்பிக்கை தெரிவித்தார்.

2006ம் ஆண்டு முதல் 2009 மே வரை, இலங்கையில் போர் உக்கிரமடைந்து வந்துள்ள காலப்பகுதி என்ற அடிப்படையில், பிரெஞ்சு அரசின் நிலைப்பாட்டுக்கு அமைய, பிரான்சில் தமிழர்களின் அகதி அந்தஸ்து சாதகமாகவே இருந்ததாகவும், அதனால் பலருக்கு தற்காலிக அகதி வதிவிட அனுமதிக்கு வாய்ப்பினை அது வழங்கியுள்ளதென வழங்கறிஞர் Sandrine Dupuy அவர்கள் எடுத்துரைத்தார்.
தற்கால நடைமுறையில் இலங்கையின் பொதுவான நிலைவரங்களுக்கு அப்பால், ஒருவர் தனக்கு உயிர்வாழ்வதற்கு அச்சுறுத்தல் நாட்டில் உள்ளதென்பதை, தகுந்தபடி உறுதிப்படுத்தப்படும் பட்சத்திலேயே, அகதி அந்தஸ்து கோரிக்கை சாதகமாக பார்க்கப்படுகின்றதென எடுத்துரைத்தார்.
கருத்துரைகளைத் தொடர்ந்து, அகதி விண்ணப்பம் இன்னமும் நிலுவையில் உள்ளவர்கள் - நிராகரிக்கப்பட்டவர்கள் என பலவித சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களின் கேள்விகளுக்கும் - சந்தேகங்களுக்கும், வழக்கறிஞர்களால் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, அகதிகள் எதிர்கொள்கின்ற நடைமுறைச் சிக்கல்களாக ,உளவளத் துணை - சட்ட வழிகாட்டுதல்கள் - ஆலோசனைகள் - உதவிகள் - பிரென்சு மொழித்துணை ஆகியக கலந்தாய்வின் வழியே கண்டறியப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகார அமைச்சகத்தின் வழியே, மனிதாபிமான உதவிகளுக்கான உறுதுணை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுமென நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் தெரிவித்தார்.
தாயக நோக்கிய செயற்பாடுகள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களது நலனிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளதென தகவல்துறை துணை அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்தார்.
நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி மகிந்தன் அவர்களினால் பிரெஞ்சு மொழியில் வழிநடத்தப்பட்ட இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், அகதிகள் விவகாரத்தில் ஈடுபட்டுவரும் வழங்கறிஞர்கள் - மொழிபெயர்பாளர்கள் - எழுதுனர்கள் - சமூகஆர்வலர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

இரும்பு ஏற்றிச் செல்வதற்கென பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி மில்லியன் பெறுதியான யுத்த உபகரணங்கள் மற்றும் ஆயதங்கள் என்பன 5 லொறிகள் மூலம் வடக்கில் இருந்து தெற்கிற்கு கடத்தப்பட்ட நிலையில் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமரசிறி சேனாரட்னவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த லொறியில் மோட்டார் குண்டுகள், ரவைகள், பித்தளை, குண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் அச்சு உள்ளிட்டவை காணப்பட்டதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த 5 லொறிகளும் கிளிநொச்சி, மாங்குளம், மற்றும் ஓமந்தை போன்ற சோதனைச் சாவடிகளைக் கடந்து வவுனியாவிற்கு வந்தது எப்படி என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். லொறியில் பயணித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனவவுனியாவில் விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்!

நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் சிறிலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கூறியுள்ளது.